வைட்டமின் டி நல்லதுதான், ஆனால்… எச்சரிக்கும் மருத்துவர்; என்ன காரணம்? | Too much vitamin D is not good for health

Share

வைட்டமின் அதிமானால்…

ஹைப்பர் வைட்டமினோசிஸ் டி என்பது அரிதான ஒன்று, எல்லோரையும் எளிதில் தாக்காது. இதற்கு காரணம், அதிகளவு வைட்டமின் டி, சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்வதாகும். அதிகப்படியான வைட்டமின் டி, ரத்தத்தில் அசாதாரணமாக அதிக அளவு கால்சியத்தை ஏற்படுத்தும். இது எலும்புகள், திசுக்கள் மற்றும் பிற உறுப்புகளை பாதிக்கலாம். இதற்கான அறிகுறிகள் உடல் சோர்வு, மயக்கமின்மை, மலச்சிக்கல் மற்றும் வலுவின்மை. இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உயர் ரத்த அழுத்தம், எலும்பு இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். இதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்தால் பொதுநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

வைட்டமின்-டி

வைட்டமின்-டி

சரியான வைட்டமின் டி அளவினால் நம் உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி, மன ஆரோக்கியம், மூட்டு வலியின்மை, எலும்பு வலுவடைவதோடு, ஒருவகை புற்றுநோயை வராமல் தடுக்கும். நீரிழிவு வரக்கூடிய வாய்ப்பை குறைக்கும், உயர் ரத்த அழுத்ததை கட்டுப்படுத்தும் என்பது உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. எனவே, முடிந்தவரையில் சரியான அளவில் வைட்டமின் டி-யை தக்க வைத்திருக்க வேண்டியது அவசியம்” என்றார்.

– ஆ.அ. தக்சின் பானு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com