பெரும்பாலான நபர்களுக்கும் இந்த முதல் அறிகுறி நினைவில் இருப்பதைப் பார்க்கலாம். தேவையான தகவல்களைத் திரட்டியதும், இ.என்.டி தொடர்பான மற்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
அதாவது, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதையடுத்து பிரத்யேகமான இ.என்.டி பரிசோதனைகள் செய்யப்படும்.
கேட்கும் திறனைப் பரிசோதிக்கும் ஆடியோகிராம் சோதனை செய்யப்படும். கூடவே, காதின் உள்ளே உள்ள அழுத்தமும் அளவிடப்படும். அதற்கு “இம்பீடன்ஸ்’ என்று பெயர். அதையடுத்து உள்காது எப்படிச் செயல்படுகிறது என்பதற்கான டெஸ்ட் செய்யப்படும்.
இப்படிச் செய்யப்படுகிற ஒவ்வொரு பரிசோதனையுமே இந்தப் பிரச்னையை அணுகவும், சிகிச்சையைத் தொடரவும் முக்கியமானது.
எல்லா டெஸ்ட் ரிசல்ட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, சிகிச்சை குறித்த முடிவுக்கு மருத்துவர் வருவார். அதற்கேற்ப, பிரச்னைக்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிறப்பு சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.