கீரை மிகவும் ஆரோக்கியமானது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதனால் தான் அடிக்கடி உணவில் கீரை சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், அவற்றை நாம் பெரும்பாலும் பொரியலாகவோ…தேங்காய் பூ போட்டு அவித்தோ அல்லது பருப்பு போட்டு மசித்தோ பெரும்பாலும் பரிமாறுவோம். இது சிலருக்கு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காது. குறிப்பாக குழந்தைகள்.
எவ்வளவு சுவையாக சமைத்தாலும் அவர்களை சாப்பிட வைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. அதிக ஆரோக்கியம் நிறைந்த வெந்தயக்கீரை மற்றும் பட்டாணி வைத்தி ஒரு சோப்பரான மலாய் கிரேவி செய்வது எப்படி என நாங்கள் கற்றுத்தருகிறோம். இது பார்ப்பதற்கு மட்டும் அல்ல, சுவையும் அருமையாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
மசாலா விழுது தயார் செய்ய…
நெய் – 1 ஸ்பூன்.
எண்ணெய் – 1 ஸ்பூன்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிது.
சீரகம் – 1/2 ஸ்பூன்.
பூண்டு – 8 பற்கள்.
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது.
பச்சை மிளகாய் – 5 நறுக்கியது.
முந்திரி பருப்பு – 8.
வெங்காயம் – 3 நறுக்கியது.
கிரேவி செய்ய…
வெண்ணெய் – சிறிது.
நெய் – 1 ஸ்பூன்.
வெந்தயக்கீரை – 1 கொத்து.
வேகவைத்த பச்சை பட்டாணி – 1 கப்.
உப்பு – 1 ஸ்பூன்.
தண்ணீர் – 1/4 கப்.
பிரெஷ் கிரீம் – 1/2 கப்.
கசூரி மேத்தி – சிறிது.

செய்முறை :
முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
இதை தொடர்ந்து, பூண்டு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இந்த மசாலா நன்கு ஆறியதும், மிக்சி ஜாரில் போட்டு நன்கு விழுதாக அரைக்கவும்.
பிறகு கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் வெந்தயக்கீரை வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
Also Read | ஒரு சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி… கொத்தமல்லி புதினா புலாவ் செய்முறை இதோ!
இப்போது, ஒரு கடாயில் நெய் சேர்த்து, அரைத்த மசாலா விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு கலக்கவும்.
பின்பு அதில் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும். பிறகு வதக்கிய வெந்தயக்கீரை மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து கலந்துவிடவும்.
இதை அடுத்து, பிரெஷ் கிரீம் சேர்த்து கலந்து கடாயை மூடி குறைத்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
கடைசியாக கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கினால், சுவையான மலாய் வெந்தயக்கீரை பட்டாணி கறி தயார்!!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.