நறுக்கிய வெங்காயம் : வெங்காயத்தை சம பங்குகளாக நறுக்குதல் என்பது அனைத்து வகையான குழம்புகள் மற்றும் சப்ஜிகளுக்கு நாம் பயன்படுத்தலாம். இவ்வாறு வெங்காயத்தை நறுக்கி பருப்பு, காய்கறிகள் போன்ற உணவுகளில் சேர்க்கும் போது சுவையை அதிகரிப்பதோடு சீக்கிரம் வெந்துவிடுகிறது. இதனால் அதிக நேரம் காத்திருக்கத் தேவையில்லை. இதோடு பருப்பு மற்றும் காய்கறிகளுக்கு நறுக்கும் வெங்காயத்தைப் போன்று கொஞ்சம் சிறிய துண்டுகளாக வெட்டும் போது அதை, பராத்தரா ஸ்டஃபிங், தோசை ஸ்டஃபிங், கட்லெட், ஆம்லெட் போன்றவற்றிற்கு நாம் உபயோகித்துக் கொள்ள முடியும்.
வெங்காயம் நறுக்குவதில் இத்தனை வகைகள் இருக்கா..? ஒவ்வொரு டிஷுக்கும் ஏற்ப நறுக்க டிப்ஸ்..!
Share