இந்த நிலையில்தான், “வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம், கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல.” என்று அதிரடியான கருத்தை தெரிவித்திருக்கிறார் சமீபத்தில் ஓய்வுபெற்ற இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய அஸ்வின், “ `ரஞ்சி டிராபி ஆசிர்வதிக்கப்பட்டது’ என்று ஒரு ட்வீட்டைப் பார்த்தேன். நான் கேட்கிறேன், ரஞ்சி டிராபியின் வரலாறு தெரியுமா… பல ஆண்டுகளாக இது நடைபெற்று வருகிறது. இது ஒரு முதன்மையான தொடர்.
சச்சின் ஒரு லெஜண்டரி கிரிக்கெட்டர். அவர் எல்லா நேரமும் ரஞ்சியில் ஆடியிருக்கிறார். இதில் விளையாடுவதால் வீரர்கள்தான் பயனடைவார்கள். எனவே, வீரர்களுக்குதான் கிரிக்கெட் முக்கியமே தவிர, கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல.” என்று கூறினார்.