அவனியாபுரம்: அதிமுகவில் தற்போது தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சென்று அதிமுக தொண்டர்களை சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த நிலையில், விரைவில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவோம். நான் பொருளாளராக இருந்த காலமான 2021-2022 மார்ச் மாதத்தில் முடிவடைந்த வரவு – செலவு கணக்கை தான் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றுள்ளனர்’’ என்றார்.
விரைவில் பொதுக்குழு கூட்டம்: ஓபிஎஸ் பேச்சு
Share
