விருதுநகரில் புத்தக திருவிழா கடந்த 14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பேசியதாவது, “நீதிபதியாக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளேன்.
நான் பிறந்த மண்ணுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. நீதியரசர் ராமகிருஷ்ணன், ஜெகதீஸ் சந்திரன் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையின் பொறுப்பு நீதிபதியாக இருந்தபோது திருச்சுழியில் ரமணர் படித்த பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு மரத்தடியில் படித்த பள்ளி மாணவர்களுக்கு உதவினர். அதேபோல மண்ணின் மைந்தன் என்று பெயரில் என்னையும் அழைத்து இருந்தனர். நான் பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய நினைக்கிறேன். ஆட்சியர் சுகபுத்ரா உதவியுடன் 20 சென்ட் நிலத்தை பொது சாலை அமைக்க திருத்தங்கல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கையொப்பமிட்டு புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உள்ளேன்.

எனது 20 சென்ட் நிலத்தை பொது சாலை அமைக்க வழங்கிய எனக்கு இந்த மண் அங்கீகாரம் செய்து மேடையேற்றி உள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தீர்ப்பு மற்றும் கீழடி தொடர்பான அத்தனை விஷயங்களுக்கும் என்னுடைய பங்களிப்பும், நீதியரசர் கிருபாகரன் பங்களிப்பும் உண்டு.