விண்வெளியில் இருந்து பூமிக்குச் சூரிய ஆற்றலை அனுப்பும் நீண்டநாள் கனவு நிறைவேறப் போகிறதா ?

Share

சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம்

பட மூலாதாரம், Star Catcher

சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம் பல ஆண்டுகாலமாக இருக்கும் ஒரு யோசனை. இப்போது உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் இதை உண்மையாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றன.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தில் ஒரு வித்தியாசமான ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு பந்துகள் எறியப்படவில்லை. மாறாக, மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒளிக்கதிர்கள் அனுப்பப்பட்டன.

சில நிமிடங்கள் நீடித்த அந்த ஒளிக்கற்றைகள், ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸ் மைதானத்தின் ஒரு பக்கத்தில் உள்ள எமிட்டரில் இருந்து பாய்ந்து, மறுபக்கத்தில் உள்ள திரையில் சேகரிக்கப்பட்டன.

சூரிய ஒளியைச் சேகரித்து, மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய லென்ஸ்கள் (அவை ஒவ்வொன்றும் சுமார் 1.2 மீட்டர் (4 அடி) உயரம் கொண்டது) மூலம் அவை அனுப்பப்பட்டது.

“லென்ஸ்களைத் திறக்க ஏணி மீது ஏறி இறங்க வேண்டியிருந்தது” என்று கூறுகிறார் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டார் கேச்சர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ரஷ்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com