விசா பெற்ற 5.5 கோடி பேரின் ஆவணங்கள் மறு ஆய்வு – டிரம்ப் நிர்வாகத்தின் புதிய நிபந்தனைகள் என்ன?

Share

அமெரிக்க வெளியுறவுத்துறை, மார்கோ ரூபியோ, விசா மதிப்பாய்வு, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாடுகளை சேர்ந்த 5.5 கோடி பேரின் விசாக்களை மறுபரிசீலனை செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க விசாக்களை வைத்திருக்கும் வெளிநாட்டினர், அமெரிக்காவிற்கு வருவதற்கோ அல்லது தங்குவதற்கோ விதிமீறல்கள் ஏதேனும் செய்திருக்கிறார்களா என்பதை ஆராய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் இனிமேல் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

“விசா முடிந்த பிறகும் நாட்டில் அதிக காலம் தங்குவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது, பொதுப் பாதுகாப்பை சீர்குலைப்பது, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது பயங்கரவாத அமைப்புக்கு உதவுவது உட்பட சட்ட விதிகளை மீறுவதற்கான அறிகுறிகள் தெரிந்தால் அவர்களுடைய விசாக்களை ரத்து செய்வோம்” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com