விகடன் இணையதளம் முடக்கம்: `அதெப்பிடி ஒரு தலைவருக்கு கைவிலங்கிடலாம்' – பிரகாஷ் ராஜ் மறைமுக விமர்சனம்

Share

இணைஅமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டு ராணுவம் இந்த மாத தொடக்கத்தில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களைக் கைகால்களில் விலங்கிட்டு இந்தியாவுக்கு நாடுகடத்திய சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. மக்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியோ அல்லது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோ அமெரிக்காவுக்கு எந்த எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.

விகடன்

அதனைச் சுட்டிக்காட்டும் வகையில், மோடி பற்றிய கார்ட்டூன் படம் பிப்ரவரி 10-ம் தேதி விகடன் ப்ளஸ் இணைய இதழில் வெளியானது. இதனால், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் எக்ஸ் தளத்தில், விகடனின் கார்ட்டூன் பிரதமரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், இதில் நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகப் பதிவிட்டிருந்தார்.

அன்று மாலையே விகடன் இணையதளம் பக்கம் சில வாசகர்களுக்கு வேலை செய்யவில்லை. சிலருக்கு மட்டுமே எந்த பிரச்சனையும் இல்லாமல் விகடன் தளம் செயல்பட்டிருக்கிறது. பிரதமரை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து கண்டங்கள் வெளியிடத்தொடங்கின. விகடன் ஆசிரியர் தரப்பில், “இந்த கார்ட்டூன் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்.” அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசுக்கு எதிராகத் தமிழ்நாட்டின் ஆளும் கட்சி உட்பட அதன் கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள், சமூக இயக்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் விகடனின் கார்ட்டூனைப் பதிவிட்டு, “இந்த கார்ட்டூனுக்குத் தலைமை தடை வைத்திருக்கிறது. ஒரு சாதாரண மனிதன் மட்டுமே கைவிலங்கிடப்பட வேண்டும். தயவுசெய்து இதை ரீட்வீட் செய்யுங்கள் அல்லது பரப்புங்கள்.” என்று மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

வலதுசாரி சிந்தனை எதிர்ப்பாளரான பிரகாஷ் ராஜ், தொடர்ச்சியாக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியைத் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com