வால்பாறையில் 5 வயது சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை: என்ன நடந்தது?

Share

கோவை, வால்பாறை, வனவிலங்கு மோதல், சிறுத்தை தாக்குதல், தேயிலை தோட்டம்
படக்குறிப்பு, வால்பாறையில் சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது.

    • எழுதியவர், பி சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வால்பாறையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சிறுத்தை ஒன்று காட்டிற்குள் தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காவல்துறையினர், வனத்துறையினரின் 18 மணிநேர தேடுதலுக்குப் பின் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் நடந் இந்தச் சம்பவம் வனப்பகுதியை ஒட்டிய தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

தாயின் கண்முன்னே தூக்கிச் சென்ற சிறுத்தை

கோவை, வால்பாறை, வனவிலங்கு மோதல், சிறுத்தை தாக்குதல், தேயிலை தோட்டம்
படக்குறிப்பு, காளியம்மன் கோவில் அருகே தொழிலாளர் குடியிருப்பு அமைந்துள்ளது

வால்பாறை அருகே தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலை பச்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com