வைரநகை பிரிவை திறந்துவைத்தபின் மோனின்போஸ்லே செய்தியாளர்களிடம் கூறுகையில், “கேரளாவுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் மலையாள சினிமாவில் நடிப்பேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

போபி செம்மண்ணூர் பேசுகையில், “நான் கும்பமேளாவுக்கு போகவேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் மோனி போஸ்லே குறித்து அறிந்தேன். பல ஆண்டுகளாக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் சென்று சாலையோரங்களில் மாலைகள் விற்பனை செய்த வைரத்தை நாடே கொண்டாடியது. அவரை நான் கேரளாவுக்கு அழைத்தேன்” என்றார்.
15 லட்சம் ரூபாய் வழங்கி மோனி போஸ்லேவை நகைக்கடை நிகழ்ச்சிக்கு அழைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தனது நகைக்கடைகளின் பிராண்ட் அம்பாசிடராக மோனி போஸ்லோவை நியமிக்கும் நடவடிக்கையிலும் போபி செம்மண்ணூர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.