“வருகிற சீசனில் தோனி விளையாடுவார்!” – சிஎஸ்கே சிஇஓ விஸ்வநாதன் நம்பிக்கை | chennai super kings ceo Viswanathan believe dhoni will be playing upcoming season

Share

திருவாரூர்: “வரும் சீசனில் சிஎஸ்கேவில் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என திருவாரூரில் சிஎஸ்கே சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட கிரிக்கெட், அசோசியேஷன் சார்பில் 27-வது பரிசளிப்பு விழா, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில், திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ் விஸ்வநாதன் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணி மற்றும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில், செய்தியாளர்களை சந்தித்த அவர், “சிஎஸ்கே அணியில் தோனி விளையாட வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அதுகுறித்து இன்னும் அவர் எங்களிடம் கூறவில்லை. அக்டோபர் 31-ம் தேதிக்கு முன்னதாக கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எங்களுக்கும் அவர் சிஎஸ்கேவில் ஆட வேண்டும் என்கிற ஆசையும், நம்பிக்கையும் இருக்கிறது. அன்கேப்டு பிளேயர்ஸ் தோனிக்காக கொண்டு வரவில்லை. இது கடந்த பல வருடங்களாகவே உள்ளது. அன்கேப்டு பிளேயர்ஸில் ஆறு முதல் ஏழு வீரர்கள் வரை இருக்கிறார்கள். சி.எஸ்.கே அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. ஏலத்துக்கு பின்னரே அது தெரிய வரும்” என்றார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் துணைச் செயலாளர் பாபா திருவாரூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் பசுபதி உள்ளிட்ட கிரிக்கெட் அணியினர் பயிற்சியாளர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com