வட கொரியா: கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

Share

காணொளிக் குறிப்பு, ரிசார்ட் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன்

4 கி.மீ, கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கட்டி முடிக்கப்பட்ட ஒரு பெரிய சுற்றுலா மண்டலத்திற்கான விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் அவரது மனைவி, மகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அவர் கொண்டுவந்த ஒரு மைல்கல் திட்டம் என அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடற்கரை ரிசார்ட் ஆறு ஆண்டுகள் தாமதமாக வரும் ஜூலை 1 ஆம் தேதி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எப்போது திறக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

4 கி.மீ கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய இந்த ரிசார்ட்டில் 20,000 பார்வையாளர்கள் வரை தங்க முடியும் என அரசு ஊடகம் KCNA கூறுகிறது. இதில் ஹோட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் ஒரு வாட்டர் பார்க் உள்ளது. இதை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

தனது அணு ஆயுத திட்டங்களால் கடுமையான பொருளாதார தடைகளைச் சந்தித்துள்ள வட கொரியா உலகின் மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது வடகொரியா வருவாய் ஈட்டுவதற்கான சுலபமான வழி என சிலர் கூறுகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com