ராம்நாராயண் பாகெல்: கேரளாவில் சத்தீஸ்கர் தொழிலாளிக்கு என்ன நடந்தது? முழு பின்னணி

Share

கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் தொழிலாளி

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, ராம்நாராயணை வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று கூறி தாக்கியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

    • எழுதியவர், இம்ரான் குரேஷி & அலோக் புதுல்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

கேரள மாநிலம் பாலக்காட்டில் சத்தீஸ்கரை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “இது போன்ற சம்பவங்கள் கேரளா போன்ற நாகரிக சமூகங்களின் பிம்பத்தை சிதைத்துவிடும்.” என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் ஆர்எஸ்எஸ்ஸின் வெறுப்பு அரசியலால் ஏற்பட்டதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, இதுதொடர்பாக பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் இது அரசியல் ரீதியாக ஏற்பட்டது அல்ல, மாறாக உள்ளூரை சேர்ந்தவருக்கும் வெளியிலிருந்து வந்தவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு எனவும் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில், குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபரின் மரணத்திற்கு பின் அமைதி நிலவுகிறது, தன் மகனுடன் தன்னுடைய நம்பிக்கைகளும் முடிந்துவிட்டதாக உயிரிழந்தவரின் தாயார் வேதனை தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com