ராணிப்பேட்டை: காமராஜர் தங்கி இருந்த நினைவகம் சீரமைப்பு – திறந்து வைத்து பெருமிதப்பட்ட உதயநிதி! | ranipet – renovation of the memorial kamarajar stayed – udhayanidhi was proud to inaugurate

Share

அவரின் வீடு சிறியதாகவும், காவல்துறையின் கண்காணிப்பிலும் இருந்ததால் தன் நண்பரான ஏ.பி.சுலைமானை அணுகி அவ்விடத்தில் காமராஜரை தங்கவைத்து, இருவரும் நீண்ட ஆலோசனை செய்து போராட்ட நகல்களை தயாரித்துகொண்டு வேலூர் வழியாக ஆங்கிலேய காவலர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பித்துசென்றனர்.

பின்னர், தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து அப்போராட்டத்தை விளக்கி தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெறச் செய்தார்கள்.

காமராஜர் நினைவகம்

காமராஜர் நினைவகம்

இதையடுத்து, காமராஜரும், கல்யாணராமனும் கைது செய்யப்பட்டு நீண்ட சிறைவாசம் பெற்றனர்.

“சுதந்திரப் போராட்ட உணர்வைத் தூண்டும் நோக்கில், காமராஜர் மறைந்து இருந்து செயலாற்ற காரணமாக இருந்த ராணிப்பேட்டை இல்லத்தை அவரின் நினைவாக சீரமைத்து, நினைவு சின்னமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று, நினைவகம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த இல்லத்தை இன்று நாம் திறந்து வைத்தோம். பெருந்தலைவர் காமராஜரின் தியாகத்தை என்றென்றும் போற்றுவோம்’’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்தோடு குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com