சென்னை : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்தினை ஒரு எச்சரிக்கை செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகள், மக்கள் புழங்கும் பழமையான கட்டங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, விபத்துகளை முன் தடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.