ரஷ்ய முன்னாள் அதிபரின் கருத்துக்களுக்கு டிரம்ப்பின் எதிர்வினை: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலை நிறுத்திய டிரம்ப்

Share

காணொளிக் குறிப்பு, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்

முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தெரிவித்த “மிகவும் ஆத்திரமூட்டும்” கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை “பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த” உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

“முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே நான் இதைச் செய்தேன். வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது அந்த மாதிரியான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவ நெறிமுறைகளின்படி, நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்கு நிலை நிறுத்தப்படுகின்றன என்பதை அதிபர் டிரம்ப் கூறவில்லை.

யுக்ரேனுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் மெட்வெடேவ் பேசியிருந்தார், அது அமெரிக்காவை அச்சுறுத்தும்விதமாக இருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com