ரயில் நிலையங்களில் இந்தியை திணித்து தமிழர் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

Share

சென்னை: ரயில் நிலையங்களில் இந்தியை திணித்து தமிழக மக்களின் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது.  திருப்பூர் ரயில் நிலையத்தில், சகயோக் என்ற இந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது புரியாது. இது புதிய வகை இந்தித் திணிப்பாகும். புதிய, புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் ரயில்வே துறை விளையாடக் கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com