ரஜினி 50: ‘கூலி’ நாயகன் ரஜினி நடித்த தனித்துவமான 6 திரைப்படங்கள் எவை?

Share

ரஜினிகாந்த் 50, சூப்பர்ஸ்டார், திரைப்படங்கள், தமிழ் சினிமா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர் ரஜினிகாந்தின் 171வது திரைப்படமான கூலி திரையரங்குகளில் நேற்று (ஆகஸ்ட் 14) வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் ரஜினி.

பாட்ஷா, அண்ணாமலை, முத்து, படையப்பா, சிவாஜி போன்ற வணிகரீதியான திரைப்படங்கள் மூலம் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற இடத்தை அவர் அடைந்திருந்தாலும், நடிப்புக்கும் கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர் நடித்த திரைப்படங்களும், விமர்சகர்களின் பாராட்டையும் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளன. அத்தகைய 6 திரைப்படங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

முள்ளும் மலரும் (1978)

ரஜினிகாந்த் 50, சூப்பர்ஸ்டார், திரைப்படங்கள், தமிழ் சினிமா

பட மூலாதாரம், Youtube

படக்குறிப்பு, ‘முள்ளும் மலரும்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது இந்தத் திரைப்படம்.

“இந்தப் படத்திற்கு ரஜினி வேண்டாம் என தயாரிப்பாளர் கூறினார். ரஜினி இல்லையென்றால் இந்தக் கதையை எடுக்கமுடியாது எனச் சொன்னேன். திரைப்படம் வெற்றிபெற்றதற்கு ரஜினியின் நடிப்பு முக்கியக் காரணம். வேறு எந்த நடிகரும் அந்த ‘காளி’ கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியாது”

முள்ளும் மலரும் திரைப்படத்தின் இயக்குநர் மகேந்திரன் ஒரு பழைய நேர்காணலில் பகிர்ந்த தகவல் இது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com