`ஜாய் கிறிசில்டா மகளிர் ஆணையத்தில் புகார் செய்தைதையே கோர்ட்டுக்கு வெளியில் தீர்வு காண முயல்கிறார்’ என ரங்கராஜ் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லும் ஜாய் கிறிசில்டாவின் நண்பர்கள் சிலர், ‘மகளிர் ஆணையம்’ அரசால் அமைக்கப்பட்ட அமைப்பு. அங்கு முறையிடுவது சட்டபூர்வமான ஒரு நடவடிக்கையே. அதில் தவறேதும் இல்லை’ என்கின்றனர்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரியிடம் நாம் பேசினோம்.
”ஜாய் கிறிசில்டா ஆணையத்துல வந்து புகார் தந்திருக்காங்க. அந்தப் புகார் மீது ஆணையத்துக்கு உள்ள அதிகாரத்தின்படி சம்மன் அனுப்பினோம். ஜாய் கிறிசில்டாவும் அவர் யார் மீது புகார் தந்தாரோ அந்த ரங்கராஜும் ஆஜராகியிருந்தாங்க.
திரும்பவும் இன்னொரு முறை ஆஜராக உத்தரவிட்டிருக்கிறேன்.
பெண்கள் யாராக இருந்தாலும் அவங்களுக்கு என்ன பிரச்னைனாலும் மகளிர் ஆணையத்துக்கு கொண்டு வர அவங்களுக்கு உரிமை இருக்கு. அப்படி வருகிற பட்சத்துல அந்தப் பிரச்னையில் தலையிட ஆணையத்துக்கும் சட்ட அதிகாரம் இருக்கு” என முடித்துக் கொண்டார்.