`மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை…’- சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்

Share

மே 2020-ல் கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி முதல்முறையாக சீனாவுக்கு சென்றார்.

சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டையொட்டி, சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி, “பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை இந்தியா முன்னெடுத்துச் செல்லும்.

சீனாவில் பிரதமர் மோடி

சீனாவில் பிரதமர் மோடி

2.8 பில்லியன் மக்களின் நலன் இந்தியா-சீனா ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இன்று பிரதமர் மோடி ஜி ஜின்பிங்கை சந்தித்ததை பின்வரும் பின்னணியில் மதிப்பிட வேண்டும்.

ஜூன் 2020-ல், கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீன ஆக்கிரமிப்பு, நமது துணிச்சலான 20 வீரர்களின் உயிர்களைக் காவு வாங்கியது.

இருப்பினும், சீன ஆக்கிரமிப்பை அடையாளம் காண்பதற்குப் பதிலாக, ஜூன் 19, 2020 அன்று, பிரதமர் மோடி சீனாவுக்கு “க்ளீன் சிட்’ கொடுத்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com