மொஹ்சின் நக்வியிடம் கோப்பையை வாங்காதது ஏன்? பத்திரிகையாளர் கேள்விக்கு சூர்யகுமார் யாதவ் பதில் | reporters ask question politically to suryakumar yadav

Share

அதாவது, “கேள்வி என்னவென்றால் நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். இன்று சாம்பியன் ஆகிவிட்டீர்கள். ஆனால், இந்த முழுத் தொடரிலும் பாகிஸ்தான் அணியுடன் உங்கள் நடத்தை சரியில்லை.

நீங்கள் கைகுலுக்கவில்லை. பின்னர் அரசியல் பத்திரிகையாளர் சந்திப்பை நீங்கள் நடத்தினீர்கள்.

முழு கிரிக்கெட் வரலாற்றிலும், விளையாட்டில் அரசியலைக் கொண்டுவந்த முதல் கேப்டன் நீங்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார்.

அபிஷேக் சர்மா - சூர்யகுமார் யாதவ்

அபிஷேக் சர்மா – சூர்யகுமார் யாதவ்

அப்போது, “நான் பேசலாமா வேண்டாமா… நீங்கள் கோபப்படுகிறீர்கள். உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை. நான்கு கேள்விகளை ஒன்றாகக் கேட்கிறீர்கள்” என்று கேள்விக்கான பதிலை மழுப்பினார் சூர்யகுமார் யாதவ்.

அதைத்தொடர்ந்து, மொஹ்சின் நக்வி கோப்பையைக் கொண்டுசென்றதை விமர்சித்த சூர்யகுமார் யாதவ், “நான் கிரிக்கெட்  பார்க்கத் தொடங்கியதிலிருந்து, விளையாடத் தொடங்கியதிலிருந்து இதுபோன்ற ஒரு நிகழ்வைப் பார்த்ததில்லை.

சாம்பியன் அணிக்கு கோப்பை மறுக்கப்பட்டது. அதுவும் போராடி வென்றது. நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். இதற்குமேல் என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது” என்றார்.

இறுதிப்போட்டி முடிவில் நடந்த இச்சம்பவம் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com