மேற்கு இந்திய தீவு​கள் வீரருக்கு அபராதம் | West Indies player fined in test match against australia

Share

பார்​படோஸ்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி​யின் வேகப் பந்​து​வீச்​சாளர் ஜெய்​டன் சீல்​ஸுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டு உள்​ளது.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள், ஆஸ்​திரேலியா அணி​களுக்கு இடையே​யான முதல் டெஸ்ட் போட்டி பார்​படோஸில் நடை​பெற்று வரு​கிறது. முதல் இன்​னிங்​ஸின்​போது ஆஸ்​திரேலிய வீரர் பாட் கம்​மின்ஸ் விக்​கெட்டை வீழ்த்​திய ஜெய்​டன் சீல்​ஸ், கம்​மின்ஸை நோக்கி ஆடு​களத்​திலிருந்து கிளம்பு என்ற ரீதி​யில் சைகை காண்​பித்​தார். இதுதொடர்​பாக போட்டி நடு​வரிடம் புகார் செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து ஐசிசி நடத்தை விதி​முறை​யின்​படி ஜெய்​டன் சீல்​ஸுக்கு போட்​டிக்​கான ஊதி​யத்​திலிருந்து 15 சதவீதம் அபராத​மாக அறிவிக்கப்​பட்​டுள்​ளது.

முதல் இன்​னிங்​ஸில் ஜெய்​டன் சீல்ஸ் 5 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. மேலும், கடந்த 2 ஆண்​டு​களில் ஜெய்​டன் ஷீல்ஸ் இது​போன்ற செயல்​களில் ஈடு​படு​வது 2-வது முறை என்​ப​தால் அவருக்கு 2 தகுதி இழப்​புப் புள்​ளி​களும் அபராத​மாக வழங்​கப்​பட்​டுள்​ளன.

முதல் டெஸ்டில் ஆஸி. வெற்றி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடியது. பார்படோஸில் கடந்த 25-ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 190 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தன.

2-ம் நாள் ஆட்டநேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று 3-ம் நாள் ஆட்டத்தை டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் தொடங்கினர்.

81.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 61, பியூ வெப்ஸ்டர் 64, அலெக்ஸ் கேரி 64 ரன்கள் எடுத்தனர். 301 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 141 ரன்களில் ஆட்டமிழந்தது. ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 159 ரன்களில் ஆஸ்திரேலியா இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com