குறிப்பிட்ட இடங்களுக்கு ‘டிரஸ் கோட்’ என்ற குறிப்பிட்ட ஆடைகளை அணிந்து வருவது தான் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக இந்தியாவின் கோவில்களில் ஆடை அணிவதற்கு சில விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் ஹரித்வாரில் இருக்கும் கோவில்களில் மேற்கத்திய ஆடைகளுக்கும், உடலை வெளிப்படுத்துவது போல் ஆடை அணிந்து இருப்பவர்களுக்கும் கோவிலுக்குள் அனுமதி கிடையாது என்று அதிரடியாக உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக, தென்னிந்தியக் கோவில்களில் ஷார்ட்ஸ் அணிந்து வரக்கூடாது என்பதை உதாரணமாகக் கூறியுள்ளனர்.
ஆண், பெண், சிறுவர் சிறுமியர் என்று அனைத்து வயதினருக்கும் ஷார்ட்ஸ் அல்லது சிறிய ஆடைகள் மற்றும் மேற்கத்திய உடைகளில் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஹரித்வாரில் இருக்கும் அனைத்து கோவில்களிலும் ஷார்ட்ஸ் மற்றும் மேற்கத்திய ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டு, புதிய டிரஸ் போடு ஒன்றை பின்பற்ற வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்திய கலாச்சாரத்திலேயே உடலை வெளிப்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தலைமை பூசாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். ஆன்மீக நகரமான உத்தரகாண்டில் இருக்கும் கோவில்களில் இது பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அகில பாரதிய ஆகார பரிஷத்தின் பிரெசிடன்ட் ஆன ரவீந்திர பூரி இந்திய கலாச்சாரத்திலேயே உடல்பாகங்களை வெளிப்படுத்துமாறு ஆடைகள் அணிவது தவறானது என்பதைப் பின்பற்றி, ஏற்கனவே தென்னிந்தியக் கோவில்களில் ஒரு சில ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை வலியுறுத்திப் பேசினார். அது மட்டுமல்லாமல் இந்த பாரம்பரியத்தை நமது சகோதரிகள், தாய்மார்கள் மற்றும் மகள்கள் ஆகியோர் அனைவரும் ஹரித்வாரில் உள்ள கோவில்களுக்கு வரும் போது பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆண் பெண், என்று இரு பலருமே, வயது வித்தியாசம் பார்க்காமல், 80 சதவிகிதம் உடலை மூடும் ஆடைகளை அணிந்து தான் கோவிலுக்குள் வர வேண்டும். பல நூற்றாண்டு பாரம்பரியம் நிறைந்த ஆலயங்களில், வழிபாடு, பூஜைகள், ஹோமம், யாகம் நடத்தப்படும். இத்தகைய சமயங்களில் நம்முடைய இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளையே அணிய வேண்டும் என்று பூரி கூறியுள்ளார்.
இந்த உடைகளுக்கான கட்டுப்பாட்டை பின்பற்றவில்லை என்ற சூழலில், தேவைப்பட்டால் கட்டாயப்படுத்தி பின்பற்ற வைக்க தயங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். ஹரித்வார் கோவில்கள் சார்பாக வெளியான இந்த ஆடைக் கட்டுப்பாட்டுக் கோரிக்கையை பல அரசியல் கட்சிகளும் வரவேற்றனர். அது மட்டுமில்லாமல், முக்கியமாக, கோவில்களுக்கு வரும் பக்தர்களிடமும் ஆலோசனையும் ஒப்புதலும் கோரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவை ஒன்று அல்லது இரண்டு சதவீத மக்கள்தான் எதிர்ப்பார்கள். ஆனால் இதன் முக்கியத்துவம் பற்றி அவர்கள் புரிந்து கொண்ட பிறகு, அவர்களும் இதை ஏற்றுக் கொள்வார்கள். ஒருவேளை இதை அமல்படுத்திய பிறகு யாரேனும் ஆடை கட்டுப்பாட்டை பின்பற்றவில்லை என்றால், அவர்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய பாரம்பரிய உடைகளை அணிய வேண்டுமென்று என்பது ஒரு பக்கம் கூறப்பட்டு இருக்கையில், ஜீன்ஸ் போன்ற உடைகளும் உடலை முழுவதுமாக மறைக்கும் எனவே ஜீன்ஸ் போன்ற உடைகளை அணியலாமா என்ற கேள்வி எழுந்தது. ஜீன்ஸ் அணியலாம், எந்த உடை வேண்டுமானாலும் அணியலாம், ஆனால் உடல் முழுவதுமாக மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று மகந்த் கூறினார். அது மட்டுமில்லாமல், மக்களுக்கு நீண்ட நேர பிரார்த்தனைகள், பூஜைகள், யாகங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்கு எது வசதியாக இருக்குமோ அத்தகைய ஆடைகளை அணிவது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வியப்பூட்டும் விதமாக, ஹரித்வார் கோவில்களில் அமல்படுத்த இருக்கும் இந்த ஆடை கட்டுப்பாட்டை, டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் மிகச்சிறந்த முடிவு என்று வரவேற்று பாராட்டினார். இது போன்ற முடிவுகள் எடுக்கும் போது தான் இன்றைய இளைஞர்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புரிந்து கொள்ள முடியும், அதை நோக்கி செல்வார்கள். இவரைப் போலவே, வேறு ஒருவரும் மேற்கத்திய பழக்கங்களை நோக்கி நாம் செல்வதைக் குறைத்துக் கொண்டு இந்திய பழக்க வழக்கங்களை பின்பற்றுவதற்கு இந்த மாதிரி முடிவுகள் உதவும் என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.