மேண்டோஸ்: கடலில் உருவாகும் புயல் ஏன் நிலத்தை நோக்கி வருகிறது? – எதிர்கொள்ள எப்படி தயாராக வேண்டும்?

Share

புயல்

பட மூலாதாரம், IMD

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தற்போது ‘மேன்டோஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக்காலங்களில் நாம் அடிக்கடி புயல்களைச் சந்திக்கிறோம். சில புயல்களை எதிர்கொள்ள நாம் பரபரப்பாக தயாராகும் வேளையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே அவை வலுவிழந்துவிடுகின்றன. சில புயல்கள் அதிதீவிர புயலாக மாறி நம் கணிப்பையும் தாண்டி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம்? புயல் குறித்த பல்வேறு கேள்விகளை தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷிடம் முன்வைத்தோம். அவர் அளித்த பதில்களை எளிய மொழியில் இங்கு வழங்குகிறோம்.

புயல் எப்படி உருவாகும்? ஏன் அவை நிலப்பரப்பை நோக்கி வருகின்றன?

கடல் அல்லது பெரிய நீர்ப்பரப்பு கொண்ட பகுதிகளில்தான் புயல் உருவாகும். பெரும்பாலான புயல்கள் கடலில்தான் உருவாகின்றன. கடல் மட்டத்தில் உள்ள நீர் ஆவியாகி மேலெழும்பும் போது குறிப்பிட்ட உயரத்தை அடைந்தவுடன் சிறு மேகமாக உருவாகும். தொடர்ந்து நீர் ஆவியாகி மேலே செல்லும் போது சிறிய மேகம் பெரிய மேகமாக மாறுகிறது. குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன் அவை சுழல ஆரம்பிக்கும். பின்னர் அது, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல், அதிதீவிர புயல் எனப் பல்வேறு நிலைகளை அடையும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com