மீண்டும் கோவிட் பரவுமா? எச்சரிக்கும் WHO… தரவுகளை பகிர உலக நாடுகளுக்கு அறிவுறுத்தல்! | WHO urges countries to share covid data

Share

“உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள், கோவிட் வைரஸ் பரவலை கண்காணிக்காமல் இருப்பது, அல்லது அது தொடர்பான தரவுகளை வழங்காததால், புதிய வகை கோவிட்-19 அச்சுறுத்தலை மதிப்பிடும் பணி தடைப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளில் 43 நாடுகள் மட்டுமே கோவிட் குறித்து அறிக்கை அளிக்கின்றன. 20 நாடுகள் மட்டுமே உலகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்கள் பற்றிய தகவல்களை வழங்குகின்றன.

குளிர்காலத்தில் புதிய வகை கோவிட் பரவும் வாய்ப்புள்ளதால், மருத்துவமனையில் சேரும் நோயாளிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை உலக நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று உலகளாவிய ஊடக மாநாட்டில் டெட்ரோஸ் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சேர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு, மற்றும் இறப்புகளின் அதிகரிப்பு போன்றவை, கோவிட் நம்மிடையே தொடர்ந்து தங்குவதற்கு வாய்ப்புள்ளது என்பதையும், அதை எதிர்த்துப் போராடுவதற்கான கருவிகள், மருந்துகள் நமக்கு தொடர்ந்து தேவைப்படும் என்பதையும் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com