மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி: பாஜ எம்எல்ஏ பேட்டி

Share

நெல்லை: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாஜ நாடாளுமன்ற குழு தான் முடிவு செய்யும் என நெல்லையில் பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். நெல்லையில் பாஜ  சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், நெல்லை தொகுதியில் பல்வேறு சீரமைப்பு பணிகளை விரைந்து சீரமைக்க   மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் தொடர்ந்து வருகிறோம். மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாஜ நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும். ஏப்ரல் மாதம் மாநில தலைவர் அண்ணாமலை துவங்கும் பாதயாத்திரையில் பங்கேற்பேன் என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com