இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தி வரும் (செப்டம்பர் 30 – நவம்பர் 2) ஒருநாள் மகளிர் உலகக் கோப்பைத் தொடர் லீக் சுற்று முடிவை நெருங்கிவிட்டது.
தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் டாப் 3 இடங்களில் இருக்கும் தென்னாப்பிரிக்கா (6-ல் 5 வெற்றி), ஆஸ்திரேலியா (5-ல் 4 வெற்றி, கைவிடப்பட்டது – 1 ), இங்கிலாந்து (5-ல் 4 வெற்றி, கைவிடப்பட்டது – 1) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.

அதேபோல், புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் வங்காளதேசம் (6-ல் 1 வெற்றி), பாகிஸ்தான் (6-ல் 2 டிரா) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டன.
இப்போது, புள்ளிப்பட்டியலில் தலா நான்கு புள்ளிகளுடன் 4, 5, 6 ஆகிய இடங்களில் இருக்கும் இந்தியா (5-ல் 2 வெற்றி), நியூசிலாந்து (5-ல் 1 வெற்றி, 2 டிரா), இலங்கை (6-ல் 1 வெற்றி, 2 டிரா) ஆகிய அணிகள் அரையிறுதியில் காலியாக அந்த ஒரு இடத்துக்குப் போட்டியில் இருக்கின்றன.