ப்ளவர்ஸ் அல்வா, பாரம்பர்ய சிறுதானிய உணவுகள்… சேலத்தில் அசத்திய அவள் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி! | Foods, `AVAL Cooking Superstar Competition’ held in Salem!

Share

சேலத்தில் சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சார்பில் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-2 நிகழ்ச்சி சௌடேஷ்வரி மகளிர் கல்லூரியில்  இன்று நடைபெற்றது. இதில், நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக செஃப் தீனா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சி ஸ்பான்சர்ஸ், சௌடேஸ்வரி கல்லூரி நிர்வாகத்தினர் கலந்துகொண்டு போட்டியாளர்களை வரவேற்று பேசினர்.

அவள் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி

அவள் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி

இந்த போட்டியில் 100 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தங்களது உறவினர்கள், தாய், மகன், அக்கா, சகோதரன் ஆகியோர் எப்படி சமைக்கிறார்கள் என்பதை பார்க்க உறவினர்கள் பலர் இந்நிகழ்ச்சிக்கு வந்தனர்.

இதில், வயதுவரம்பு ஏதுமின்றி பலர் தனது திறமைகளை வெளிப்படுத்துவதற்காக கலந்து கொண்டுள்ளனர். இன்று நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பெரியவர்கள், சிறியவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் சேலம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது முதல் சுற்றிணை செஃப் தீனா தொடங்கி வைத்தார்.

இந்த சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் ப்ளவர்ஸ் அல்வா, பாரம்பர்ய சிறுதானிய உணவு வகைகள் என காண்போரை கவரும் வண்ணம் விதவிதமாக சமைத்து அசத்தினார்கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com