பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைப்பது காட்டுமிராண்டித்தனமானது – பாகிஸ்தான் தாக்குதல் குறித்து ஆப்கான் வீரர் ரஷித் கான் வருத்தம் | Rashid Khan speech on Pakistan attack Kill 3 Afghan Cricketers

Share

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல்களும், தாக்குதல்களும் நடந்து வருகின்றன.

இதனால் இரு நாடுகளுக்கிடையே பெரும் போர் நடக்கக்கூடும் அபாயம் இருப்பதால், 48 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முன்வர வேண்டும் எனக் கத்தார் நாடு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது பாகிஸ்தான்.

இந்தத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர், 12 பேர் பலத்த காயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தத் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் தாக்குதலில் பலியான வீரர்கள்

பாகிஸ்தான் தாக்குதலில் பலியான வீரர்கள்

இந்தச் சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கான், “சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. உலக அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆர்வமுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் உயிரைப் பறித்த ஒரு சோகம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com