பெயின் கில்லர் இல்லாமல் பீரியட்ஸ் வலியை சமாளிக்க முடியாதா? | Are there ways to deal with period pain without relying on painkillers?

Share

ஹாட் வாட்டர் பேக் (Hot water bag) கொண்டு அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது தசைகளைத் தளர்த்தி வலியைக் குறைக்கும். இரவில் படுக்கச் செல்லும் முன், வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலுக்கு இதமான உணர்வையும், நல்ல உறக்கத்தையும் தரும்.

மாதவிடாய் நாள்களில் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்றொரு பொதுக்கருத்து உள்ளது. ஆனால், அதை அப்படியே பின்பற்றாமல், அவரவர் உடல் ஒத்துழைத்தால் தாராளமாக வொர்க் அவுட்செய்யலாம்.

உடற்பயிற்சி செய்யும்போது சுரக்கும் எண்டார்ஃபின் (Endorphin) ஹார்மோன் இயற்கையான வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. அதேபோல சிலவகை யோகாசனங்களும் ( (Cat-Cow pose, Child’s pose) பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் வலியைக் குறைக்கும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Deep breathing) செய்வதன் மூலம் மன அழுத்தமும் வலியும் குறையும்.

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி (Deep breathing) செய்வதன் மூலம் மன அழுத்தமும் வலியும் குறையும்.

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி (Deep breathing) செய்வதன் மூலம் மன அழுத்தமும் வலியும் குறையும்.

பீரியட்ஸ் வலியைக் குறைப்பதில் உணவுகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு. மெக்னீசியம் சத்து அதிகம் உள்ள வாழைப்பழம், கீரை, நட்ஸ், டோஃபு போன்றவற்றைச் சாப்பிடலாம். ஒரு துண்டு டார்க் சாக்லேட் மற்றும் சூடான சூப் குடிப்பது இதமாக இருக்கும். 

அதிகப்படியான கஃபைன் (Caffeine), ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் சீஸ் (Cheese) போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. போதுமான அளவு ஓய்வும் ஆழ்ந்த உறக்கமும் உடலைத் தளர்த்தி, வலியைக் குறைக்கும்.

அன்றாட வேலைகளைச் செய்யவே முடியாத அளவுக்கு வலித்தாலோ, மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வலி ஆரம்பித்தாலோ, ஃபைப்ராய்டு (Fibroids) எனப்படும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிந்தாலோ, சுய வைத்தியங்களைச் செய்துகொண்டிருக்காமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகமிக அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com