இது ஒரு பெரிய போட்டி. எங்களுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு. அதில் பதட்டப்படாமல் அந்தந்த தருணங்களில் என்ன தேவையோ அதில் கூர்மையாக கவனத்தை செலுத்த விரும்புகிறோம்.
நாங்கள் அடைய நினைக்கும் டார்கெட்களை சிறிய சிறிய துண்டுகளாக பிரித்து கொள்ள நினைக்கிறோம். பெரிய இலக்காக பார்க்கும் போதுதான் நமக்கு அழுத்தம் கூடும்.
சிறிய சிறிய இலக்குகளாக பிரித்து அதை எட்டுகையில் உத்வேகம் கூடும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு நான் அழுததைப் பற்றி கேட்கிறீர்கள். நான் எப்போதுமே அழுவேன்.

நேற்று நீங்கள் அதை டிவியில் பார்த்தீர்கள், அவ்வளவுதான். டிரெஸ்ஸிங் ரூமில் பல முறை அழுதிருக்கிறேன். முக்கியமான தருணங்களில் முதலில் அழும் நபர் நானாகத்தான் இருப்பேன்.
நம்முடைய உணர்ச்சிகளை அப்படியே வெளிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. இப்போது பெற்றோர்கள் நல்லவே விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள். அதனால் பெண் குழுந்தைகள் தாங்கள் செய்ய நினைப்பதை மகிழ்ந்து அனுபவித்து செய்யுங்கள். இதுதான் ஆசியாவின் பெண்களுக்கு நான் கூறும் அறிவுரை.” என்றார்.