பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

Share

உட்புற மையக்கரு உட்பட பூமியின் அடுக்குகளை வெளிப்படுத்தும் முப்பரிமாண படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உட்புற மையக்கரு உட்பட பூமியின் அடுக்குகளை வெளிப்படுத்தும் முப்பரிமாண படம்

ஒரு விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, பூமியின் உட்புற மையக்கருவின் வடிவம் கடந்த 20 ஆண்டுகளில் மாறியிருக்கக் கூடும்.

பூமியின் நடுப்பகுதி ஒரு பந்து போன்ற வடிவில் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், அதன் ஓரங்கள் சில இடங்களில் 100 மீட்டர் உயரத்துக்கு உருக்குலைந்திருக்கலாம் என்பது அந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசியர் ஜான் விடாலின் கூற்று.

சூரியனின் கதிரியக்கத்தில் இருந்து பூமியில் வாழும் உயினங்களை காக்கும் காந்தப்புலத்தை உருவாக்கும் பூமியின் உட்புற மையக்கருவே நமது கிரகத்தின் துடிக்கும் இதயமாக இருக்கிறது.

பூமியோடு தொடர்பில்லாமல் உட்புற மையக்கரு, தனியாக சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சுழற்சி இல்லாவிட்டால், பூமி அழிந்து, பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தனது காந்தப் புலத்தை இழந்த செவ்வாயைப் போன்று வறண்டு போய்விடும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com