கடந்த 2021 ஆம் ஆண்டு ‘புஷ்பா- 1’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனைத்தொடர்ந்து ‘புஷ்பா-2’ திரைப்படம் பிரமாண்டமாக டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு இப்பொழுதே ரசிகர்கள் முன்பதிவு செய்ய ஆரம்பித்து விட்டனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

படம் வெளியாவதைத் தொடர்ந்து படக்குழுவினர் தொடர்ந்து புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமௌலி ‘புஷ்பா’ படம் குறித்து சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். படத்தை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
ஏனென்றால் ‘புஷ்பா – 2’ ஏற்கெனவே மக்களுடைய வரவேற்பைப் பெற்றுவிட்டது. இந்தியாவில் உள்ள மக்கள் இந்தப் படத்தைப் பார்க்க டிக்கெட்டுகளை வாங்கிவிட்டதால், ‘புஷ்பா 2’ படக்குழுவினருக்கு ஒருவித ஊக்கத்தை கொடுத்திருக்கிறது.
புஷ்பராஜ் என்ட்ரி சீனை சுகுமார் எனக்கு காட்டினார். மிகவும் நன்றாக இருந்தது. முதல் காட்சியே இப்படி இருக்கிறது என்றால், மொத்த படமும் எப்படி இருக்கும் என பாருங்கள்” என ராஜமௌலி நெகிழ்வாகப் பேசி இருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
