புரத சத்து நிறைந்த சுவையான உணவு சாப்பிட ஆசையா..? இந்த ரெசிபி டிரை பண்ணுங்க!

Share

இன்றைய உலகத்தில் எல்லோரும் டயட் கான்ஷியஸ் ஆகி விட்டனர். பழங்கள் காய்கறிகளை சாப்பிட சொல்லும்போது கேட்காதவர்கள் அதை டயட் என்று சொல்லும்போது உண்கின்றனர். அதே போல ப்ரோடீன் தேவைகளை பூர்த்தி செய்ய பட்ஜெட் வழிமுறையில் ஒன்று தான் முளைகட்டிய பயிர்கள். 

ஆனால் இதை தினமும் வெறுமனே சாப்பிட்டால் போர் அடித்துவிடும். அதை சாப்பிட மற்றொரு வழி தாளித்து சாப்பிடுவது. அதுவும் கூட கொஞ்ச நாளில் போர் அடித்து விடும். இந்நிலையில் அதை வேற எப்படி சாப்பிடுவது என்று யோசிக்கலாம். அப்படி நாங்களும் தேடி பார்த்தபோது தான் ஒரு டிஷ் கிடைத்தது.

மாசாக்களுக்கும் சுவையான உணவுகளுக்கும் பெயர் பெற்ற  சமையல்  ஊர்களில் ஒன்று மகாராஷ்டிரா. அங்கே முளைகட்டிய பச்சை பயிரை வைத்து சமைக்கப்படும் சுவையான உணவு தான்  மூகாச்சா பாத். அதை எப்படி வீட்டில் எளிதாக செய்வது என்று சொல்கிறோம்.

மகாராஷ்டிர மூகாச்சா பாத் செய்யத் தேவையான பொருட்கள்: 

  • 1 கப் அரிசி
  • 1 கப் முளையிட்ட பச்சை பயிறு
  • 1 வெங்காயம், பொடியாக வெட்டப்பட்டது
  • 1 தக்காளி, பொடியாக நறுக்கியது
  • 3-4 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 கப் கொத்தமல்லி இலைகள்
  • 1/2 கப் புதினா இலைகள்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 அங்குல இலவங்கப்பட்டை
  • 4 கிராம்பு
  • 6-8 மிளகுத்தூள்
  • 1 நட்சத்திர சோம்பு விதை
  • 4 பச்சை ஏலக்காய்
  • 2 பிரிஞ்சி இலைகள்
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • சுவைக்கு உப்பு
  • 3 கப் சூடான நீர்
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

மகாராஷ்டிர மூகாச்சா பாத் செய்முறை: 

அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடி கனமான பாத்திரம்  அல்லது கடாயில், எண்ணெயை சூடாக்கி, சீரகத்தை சேர்த்து, மேலே பட்டியலிடப்பட்டுள்ள இலவங்கப்பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலைகள் முதலியவற்றை சேர்க்கவும். பின்னர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் அல்லது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர்,  நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அது ஒளிரும் தன்மைக்கு மாறியதும், நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். பாதி வந்ததும் மஞ்சள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் 2 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

இதையும் பாருங்க : லால் மாஸ் முதல் ரோகன் ஜோஷ் வரை… இந்திய மாநிலங்களின் 5 சுவையான மட்டன் உணவுகள்..!

இது வெந்து எண்ணெ பிரிந்து வெளியேறும் வரை குறைந்த தீயில் சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் முளைகட்டிய பச்சை பயிறு  மற்றும் அரிசியை பாத்திரத்தில் சேர்க்கவும். பின்னர், 3 கப் சூடான நீரை உள்ளே ஊற்றவும். பின்னர் எல்லாவற்றையும் கிளறி, பாத்திரத்தை மூடி வைக்கவும்.

இத கலவையை 15-20 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.பின்னர், அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும். அவ்வளவு தான். புரத சத்தோடு சுவையான உணவும் தயார். நிச்சயம் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com