இதுகுறித்து மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்கள் கூறுகையில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி இந்தியாவில் ஒன்பது பெயரில் ஒருவருக்கு புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளது மற்றும் புற்று நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ செலவு மற்ற எந்த சிகிச்சையை காட்டிலும் மிக அதிகமாக இருப்பதால், புற்றுநோயை அதன் ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம்.
இந்த உயர்ந்த சேவையின் துவக்கமாக புதுச்சேரி அரசோடு இணைந்து, 1 லட்சம் மக்களுக்கு “இலவச புற்றுநோய் பரிசோதனை” செய்யப்பட உள்ளது.. இதில் நாள் ஒன்றிற்கு சுமார் 160 பொதுமக்கள், மாதத்திற்க்கு சுமார் 4166 பொதுமக்கள் என்ற விகிதத்தில் 2 வருட காலத்திற்குள் நிர்ணையிக்கப்பட்ட 1 லட்சம் மக்களை பரிசோதிக்க உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ஏறத்தாழ புதுச்சேரி மக்கள் தொகையின் 12 முதல் – 14 சதவீத மக்கள் பயன் பெறுவார்கள்.
ஆரம்ப காலகட்டத்தில் கண்டுபிடிக்கபடும் புற்றுநோய், ஏறத்தாழ 30-40% சதவீத சிகிச்சை செலவை மிச்சப்படுத்தும் என்பதாலும், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையை துவங்குவதன் மூலம் சிகிச்சையின் வெற்றி சதவீதமும் அதிகரிக்கும் என்பதாலும் இந்த “இலவச புற்றுநோய் பரிசோதனை” புதுச்சேரி மக்களுக்கு மிகப்பெரிய நன்மை பயக்கும் செயலாக இருக்கும்.
அவருடன்ஆறுபடைவீடுமருத்துவக்கல்லூரி வேந்தர். Dr. S. கணேசன், விநாயகமிஷன்குழுமத்தின் இயக்குனர் Dr. அனுராதாகணேசன், போர்டுமெம்பர் திரு.சுரேஷ்சாமுவேல், டீன், ப்ரொவோஸ்ட் Dr. P.F.கோட்டூர், Dr. ராகேஷ்சேஹ்கள், Dr. வினோத்பிரேம்சிங், பேராசிரிய