புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்: முதல்வர் ரங்கசாமி பேட்டி

Share

புதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி, செய்தியாளர்களை சந்தித்தார், புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனமாக பால்நிறுவனங்களும், புதுச்சேரியில் பால் உற்பத்தியாளர்கயிடம் பால் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பால் உற்பத்தியாளர்கள், பால்கொள்முதல் விலையை உயர்த்தித்தர வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர்.

இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டர்க்கு ரூ.34 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.3 உயர்த்தி தற்பொழுது ரூ.37 இன்றில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதுச்சேரியில் கடந்த சில தினங்களகவே மாநில அந்தஸ்து விவகாரம் ஒரு மிகப்பெரிய பூதாகரமாக விஷயமாக தொடர்ந்து பேசும் பொருளாக இருந்து வருகிறது. ஏனெனில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்த சில தினகள்க்கு முன்பு அரசு அதிகாரிகள் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்று கூறினார்.  

மேலும் தனக்கு நாள்தோறும் அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக புதுச்சேரியில் மாநில அந்தஸ்து வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி வெளிப்படையாகவே தன்னோடைய கருத்தை தெரிவித்தார். இது ஒட்டுமொத்த புதுச்சேரி மாநிலத்தில் ஒரு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள பல்வேறு  அரசியில் கட்சியினர், சமூக அமைப்பினர் மற்றும் செயற்கை சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் அதிமுக சார்பில் புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கேரி  நேற்றைய தினம் முழுஅடைப்பு பந்த் போராட்டமானது நடைபெற்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துருந்தார்.

மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு நேரடியாக அழைத்து சென்று பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்து வழங்க கோரி வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.      

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com