பிரான்ஸ் அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின்: யமால் அசத்தல்! | uefa nations league spain beats france in semi finals yamal scores 2 goals

Share

ஸ்சுட்கார்ட்: நடப்பு யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கால்பந்து அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின் அணி. அந்த அணியின் இளம் வீரர் யமால், 2 கோல்களை பதிவு செய்து அசத்தினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் 4 கோல்களை 59 நிமிடங்களுக்குள் ஸ்பெயின் பதிவு செய்துவிட்டது. அதுவரை பிரான்ஸ் அணி ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை. 59-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் அணிக்கு முதல் கோலை பதிவு செய்தார் எம்பாப்பே.

அதன் பின்னர் மேலும் மூன்று கோல்களை பிரான்ஸ் பதிவு செய்தது. அதில் ஒன்று ஸ்பெயின் வீரர் விவியன் போட்டுக் கொடுத்த ‘சுய கோல்’ ஆகும். இறுதியில் கடைசி விசில் அடிக்கப்பட்ட போது 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

ஸ்பெயின் தரப்பில் நிக்கோ வில்லியம்ஸ் 22-வது நிமிடத்திலும், மெரினோ 25-வது நிமிடத்திலும், லாமைன் யமால் 54 (பெனால்டி) மற்றும் 67-வது நிமிடத்திலும், பெத்ரி 55-வது நிமிடத்திலும் கோல் பதிவு செய்தனர். இந்திய நேரப்படி ஜூன் 9-ம் தேதி நள்ளிரவு 12.30 மணி அளவில் போர்ச்சுகல் அணியை நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் சந்திக்கிறது. ஸ்பெயின் அணி 2024 யூரோ கோப்பை தொடரின் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com