பிரம்மபுத்ராவுக்கு குறுக்கே அணை கட்டும் சீனா : இந்தியா மற்றும் வங்கதேசத்தின் கவலை என்ன?

Share

யார்லுங் சாங்போ கணவாயின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலப்பரப்பில் மிகவும் பெரியதும் ஆழமானதும் என சொல்லப்படும் யார்லுங் சாங்போ கணவாயில் அணை அமைந்துள்ளது

சீன அதிகாரிகள், உலகின் மிகப்பெரிய புனல் மின்நிலைய அணையை திபெத்திய பிரதேசத்தில் கட்டத் தொடங்கியுள்ளனர். இந்தத் திட்டம் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கவலைகளை எழுப்பியுள்ளது.

உள்ளூர் ஊடகங்களின் கூற்றுப்படி, யார்லுங் சாங்போ ஆற்றில் (இந்தியாவில் பிரம்மபுத்ரா என அழைக்கப்படும் ஆறு) கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்காக சனிக்கிழமை நடைபெற்ற விழாவிற்கு சீனப் பிரதமர் லி கியாங் தலைமையேற்றார்.

இந்த ஆறு திபெத்திய பீடபூமி மற்றும் பல தெற்காசிய நாடுகளின் வழியாக பாய்கிறது. ஆற்றின் ஓட்டத்தின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் வங்கதேச மக்கள் மட்டுமல்லாது அப்பகுதி சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் திபெத்தியர்கள் மீது ஏற்படுத்த சாத்தியமுள்ள தாக்கம் காரணமாக விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளூர் வளர்ச்ச்சியை ஊக்குவிக்கும் என சீன அரசு தெரிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com