‘பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லாததால் தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!’ வெட்கி தலைகுனியுங்கள் அரசியலர்களே! |Kannagi Nagar Tragedy:Baby Dies in Womb as No Doctor Was Available for Delivery Care

Share

`எங்க குழந்தை இந்த உலகத்தை பார்க்குறதுக்கு முன்னாடியே கொன்னுட்டாங்களே….ஏழைங்க உசுருன்னா இவங்களுக்கு அவ்வளவு அநாமத்தா போச்சா…” ஆற்றாமையில் பொங்கி அழும் ஆரோக்கிய மேரி அம்மாவின் அழுகுரல் இன்னமும் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஆரோக்கிய மேரியின் மருமகள் மெர்ஸி சேப்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஐ.சி.யூக்கு வெளியே மெர்ஸியின் கணவர் ஸ்டீபனும் மாமியார் ஆரோக்கிய மேரியும் தாள முடியாத சோகத்தில் வெதும்பி போய் நின்றனர். அவர்களின் கதையை கேட்கும்போது நமக்கே மனம் உடைந்து போகிறது.

ஆரோக்கியமேரி

ஆரோக்கியமேரி

‘நாங்க பொறந்து வளர்ந்தது எல்லாமே கண்ணகி நகர்லதான் சார். என் மனைவி மெர்ஸி குழந்தை உண்டாகியிருந்தா. இது எங்களுக்கு இரண்டாவது குழந்தை. முதல் குழந்தை நார்மலான குழந்தையா இல்ல. அதுக்கு உடம்புல நிறைய பிரச்னை. அதனால் இந்த இரண்டாவது குழந்தைய குடும்பமே ஆவலா எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்துச்சு. இது 9 வது மாசம். திடீர் திடீர்னு வலி வருங்குறதால எல்லாரும் எப்பவும் அலர்ட்டாவே இருப்போம். 8 ஆம் தேதி நைட்டு அவளுக்கு தாங்க முடியாத வலி. அப்பவும் பக்கத்துல இருக்குற அந்த நகர்ப்புற சமூக நல மருத்துவமனைக்குதான் போனோம். நர்ஸூங்க வலிக்கு மாத்திரை கொடுத்து அனுப்பிட்டாங்க. நைட்டு கொஞ்சம் பரவால்ல. நேத்து காலையில நான் வேலைக்கு போன பிறகு திரும்பவும் தாங்க முடியாத வலி வந்திருக்கு. அம்மாதான் திரும்பயும் அதே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. கண்ணகி நகர்ல வேற பிரசவ ஆஸ்பத்திரியும் கிடையாது. இருக்குற அந்த ஆஸ்பத்திரிலயும் காலைல 10 மணி நேரத்துக்கும் டாக்டர் இல்ல. கொஞ்ச நேரம் நர்ஸூங்க எதோ ட்ரை பண்ணி பார்த்துருக்காங்க. மெர்ஸிக்கு வலி இன்னமும் அதிகமாகியிருக்கு. உடனே சேப்பாக்கம் கோசா ஆஸ்பத்திரிக்கு கூட்டி போக சொல்லிருக்காங்க

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com