திருநெல்வேலி: நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே அமைந்துள்ள செல்லப்பாண்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தங்கள், பயணிகளுக்குத் தேவையான இருக்கை வசதிகள் இல்லாமல் உள்ளன. இதனால் தினசரி பயணிக்கும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் நெல்லை புதிய பஸ்நிலையம், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. அம்பை, சுரண்டை, கடையம், செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம் மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் பஸ்கள் இங்கு நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.
இந்த இடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பயணிகள் பேருந்துகளில் பயணிப்பது வழக்கமாகவே காணப்படுகிறது. இதற்காக பஸ் நிறுத்தம் நான்கு பிரிவுகளில் கட்டமைக்கப்பட்டுள்ளன:
1. முதலாம் நடைமேடை – நெல்லை புதிய பஸ்நிலையம் நோக்கி செல்லும் பஸ்களுக்கு
2. இரண்டாம் நடைமேடை – பாளையங்கோட்டை பஸ்நிலையம் நோக்கி செல்லும் பஸ்களுக்கு
3. மூன்றாம் நடைமேடை – மார்க்கெட், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கான பஸ்களுக்கு
4. நான்காவது பிரிவு – பாளையங்கோட்டையில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி வந்து செல்லும் பஸ்களுக்கு. இதற்காக இரண்டு நடைமேடைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.