பாத்திரம் துலக்கும் ஸ்பாஞ்சில் மறைந்திருக்கும் ஆபத்து – எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

Share

ஆரோக்கியம், உடல்நலம், பாக்டீரியாக்கள், மனித உடல், உணவுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்பாஞ்ச்களில் ஏராளமான துளைகளும், பள்ளங்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு நுண்ணுயிர்கள் தங்குவதற்கு உகந்தவையாக இருக்கின்றன

நாம் சமையல் செய்த பாத்திரங்களை சுத்தப்படுத்த ஸ்பாஞ்ச்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த ஸ்பாஞ்ச்கள் எப்போதும் ஈரமாக, உணவுத் துகள்களுடன் இருக்கும். இது பாக்டீரியா செழித்து வளர உகந்த சூழலாக இருக்கிறது. இதனால் ஸ்பாஞ்சிற்கு பதிலாக பிரஷை தேர்ந்தெடுக்க வேண்டுமா?

பொதுவாக பாக்டீரியாக்களுக்கு எந்த ஒரு மோசமான சூழலிலும் வசிப்பது எப்படி என்பது தெரியும். எந்த வகையான மோசமான சூழலிலும் பல வகை பாக்டீரியாக்களுக்கு வசிக்கத் தெரியும். அவற்றில் சில பூமியின் மேலோட்டின் ஆழத்திலோ அல்லது ஆழிநீர் வெப்ப ஊற்றுகளிலோ அல்லது மிகவும் குளிரான பிரதேசங்களிலும் போன்ற எந்த ஒரு சூழலிலும் செழித்து வளர்கின்றன. ஆனால் இதுபோன்ற பாக்டீரியாக்கள் வசிக்கத்தக்க பிரதான இடமாக சமையல் அறையில் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்ச்கள் இருக்கின்றன.

சாப்பிட்ட தட்டுகள், பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் இந்த ஸ்பாஞ்ச்கள் மொத்தமும் நுண்ணுயிர்களால் நிறைந்திருக்கின்றன. அவை பாக்டீரியாக்களுக்கு சொர்க்கமாக இருக்கின்றன. அவை ஈரப்பதத்துடன், இதமாக, நுண்ணுயிர்கள் உண்ண உணவுத் துகள்களுடன் நிறைந்து இருக்கின்றன.

ஸ்பாஞ்ச்களில் 362 வகையான நுண்ணுயிர்கள்

2017-ல் ஜெர்மனியின் ஃபர்ட்வான்கன் பல்கலைக்கழகத்தில் (Furtwangen University) நுண்ணுயிரியல் வல்லுநராக இருக்கும் மார்கஸ் எகர்ட், சமையலறையில் பயன்படுத்திய ஸ்பாஞ்ச்களில் நுண்ணுயிர்கள் வாழும் சூழல் குறித்த ஆய்வை வெளியிட்டார். அந்த ஸ்பாஞ்ச்களில் 362 வகையான நுண்ணுயிர்கள் இருப்பதை அவர் கண்டறிந்தார். ஒரு சதுர சென்டிமீட்டரில் 54 பில்லியன் பாக்டீரியாக்கள் சில இடங்களில் காணப்பட்டதாக தெரியவந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com