பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் மு.க.ஸ்டாலின் – எதிர்கொள்ள போகும் சவால்கள்

Share

ஸ்டாலின், தமிழக முதலமைச்சர்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

2018ஆம் ஆண்டு ’கலைஞர் சிலை திறப்பு விழா’வில திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் என்ன பேசப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணத்தில், ‘ராகுல் காந்தியை வருகின்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியடைந்தது.

தற்போது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலைக் குறிப்பிட்டு, “இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்,” எனக் கூறியிருக்கிறார்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி, ஜூன் 7ஆம் தேதியன்று மாலை சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com