பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு என்ன?

Share

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுதாரர் மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளே நுழையத் திட்டமிட்டதாகவும், ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார்.

“நீதிமன்றத்தில் மதியம் 12:39 மணிக்கு தற்கொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.” என்றார் மொஹ்சின் நக்வி.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காண்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிப்பார்கள் என்றும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் நக்வி தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தில் அண்மைய ஆண்டுகளில் தற்கொலைத் தாக்குதல்கள் அரிதாகவே நிகழ்ந்துள்ளன. செவ்வாய்க்கிழமை தற்கொலை தாக்குதல் நடந்த சம்பவ இடத்தில் இருந்து வெளியான காட்சிகளில் எரிந்த காரின் எச்சங்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வளையம் போடப்பட்டிருந்ததைக் காட்டின.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com