பறவை கூடு சூப்; உலகிலேயே காஸ்ட்லி; பருக ஆர்வம் காட்டும் மக்கள்; என்ன காரணம்? | Bird’s Nest Soup Is One Of Most Expensive Dishes In The World, Here’s Why

Share

இந்த சூப் பல்வேறு நன்மைகளை வழங்குவதாக சீன மக்கள் நம்புகின்றனர். இந்த சூப்பின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், இது சரும பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனவும் சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் ஆஸ்துமா அல்லது நாள்பட்ட இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளைப் போக்கவும், பசியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதாக சீன மக்கள் நம்புகின்றனர். இதனைப் பருக சீன மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சீன மக்கள் மட்டுமல்லாது தற்போது இணைய பயனர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.

சிவப்புக் கூடுகள் என்று அழைக்கப்படும் மிகவும் அரிதான பறவையின் கூடு ஒரு கிலோ $10,000 (தோராயமாக ரூ. 8 லட்சம்) மதிப்புடையது. வெள்ளை மற்றும் கருப்புக் கூடுகளின் விலை ஒரு கிலோ $5,000 முதல் $6,000 (தோராயமாக ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம்) வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com