பதான் பட பாடலில் அதிக ஆபாசம்; படம் தோல்வியடையும்! நடிகர் கமால் கானின் விமர்சனத்தால் ஷாருக் அதிர்ச்சி |Shah Rukh shocked by actor Kamal Khan’s criticism about Pathan movie

Share

நடிகை தீபிகா படுகோனே பாடல் காட்சியில் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்திருப்பதற்கு அவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். பதான் படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியபோது அதில் பாடல் காட்சி உட்பட சில திருத்தங்களை செய்யும்படி தணிக்கை குழு திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் சர்ச்சைக்குரிய பாடல் தொடர்ந்து படத்தில் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இப்படம் குறித்து நடிகர் கமால் ஆர் கான் சோசியல் மீடியாவில் மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கிறார்

அதில் பதான் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியையே சந்திக்கும் என்றும், படத்தின் தலைப்பு இந்துக்களுக்கு எதிராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பதான் பட பாடல் காட்சி

பதான் பட பாடல் காட்சி

படம் குறித்து தொடர்ந்து எதிர்மறையான தகவல்களையே கமால் கான் சோசியல் மீடியாவில் பரப்பி வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள் பதிவில், பதான் படத்தின் பாடலில் அதிக அளவு ஆபாசம் இருக்கிறது என்று உண்மையைச் சொன்னதற்காக ஷாருக்கான் என்னை கோர்ட்டிற்கு இழுக்கலாம். பாடல் குறித்து நான் தெரிவித்துள்ள விமர்சனத்தை பார்த்துவிட்டு நான் தவறாக சொல்லி இருக்கிறேனா என்று சொல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com