இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோற்றது.
இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (அக்டோபர் 23) நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடர் முடிந்ததும், சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவிருக்கிறது.
அதற்கு முன்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 நான்கு நாள் போட்டிகளில் இந்தியா ஏ” அணி விளையாடவிருக்கிறது. இந்த நிலையில், அந்த 2 போட்டிகளுக்கான இந்தியா ஏ’ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

முதல் போட்டிக்கான அணி:
ரிஷப் பண்ட் (கேப்டன்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), ஆயுஷ் மத்ரே, என். ஜக்தீசன், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் ப்ரார், அன்ஷுல் காம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி, சரண்ஷ் ஜெயின்.
இரண்டாவது போட்டிக்கான அணி:
ரிஷப் பண்ட் (கேப்டன்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), கே.எல். ராகுல், துருவ் ஜூரல், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் ப்ரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.