நெல்லை கௌரவக் கொலை வழக்கு: இளம் மென்பொறியாளருக்கு என்ன நடந்தது? முழு விவரம்

Share

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் செல்வ கணேஷ்
படக்குறிப்பு, கொலையுண்ட மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷூம், ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டு முன் கூடியுள்ள உறவினர்களும்

நெல்லை பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் மென்பொறியாளர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரை அவரது தாயின் கண் முன்னே பெண்ணின் சகோதரர் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் காவல் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.

காவல் சார்பு ஆய்வாளர்களான பெண்ணின் பெற்றோர் மீதும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி கொலையுண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் – தமிழ் செல்வி தம்பதியரின் மகன் கவின் செல்வ கணேஷ்(26). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த சரவணன் – கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளை காதலித்து வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களது குடும்பம் இதற்கு முன்பு தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகளும் கவின் செல்வ கணேஷும் ஒரே பள்ளியில் படித்ததால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அதுவே பின்னாளில் காதலாக மாறியுள்ளதாக காவல்துறை கூறுகிறது. காவல் சார்பு ஆய்வாளர் தம்பதியருக்கு சுர்ஜித் (24) என்ற மகனும் இருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com