நாவூற வைக்கும் ஈரோடு உப்பு கறி வறுவல்.. எப்படி செய்யனும் தெரியுமா?

Share

உணவு என்பது மனிதன் அத்தியாவசிய தேவைகளில் முதன்மையான ஒன்று, உணவு சாப்பிட்டு வாழ்ந்த காலம் எல்லாம் மலை ஏறிப்போய்விட்டது இப்பொழுதெல்லாம் வாழ்வதே வித விதமான உணவுகளை தேடித் தேடி சாப்பிடவே என்கின்றனர் உணவுப் பிரியர்கள். சைவப்பிரியர்கள் காட்டிலும் அசைவப்பிரியர்களே அதிகம். இப்படி உணவின் நாகரீக வளர்ச்சி அசுர வளர்ச்சி தான் சரியாகச் சொன்னால் பசிக்கு அழுகும் வயிற்றை விட ருசி அழுகும் நாக்கை சமாதானம் செய்யவே அனைவரும் விரும்புகின்றனர்.

என்னதான் வித விதமான உணவுகள் தயாரித்து சாப்பிட்டாலும் முந்தைய காலங்களில் செய்யப்பட்ட உணவுகள் ருசியே தனிதான்.
கொங்கு மண்டலத்தில் குறிப்பாக ஈரோடு பகுதியில் பெருமளவு வீடுகளிலும் கடைகளிலும் செய்யப்படும் மிளகாய் கறி வறுவல்.இதற்கு பள்ளிபாளையம் சிக்கன்,காட்டு கறி வறுவல்,உப்பு கறி, ஆசாரி வறுவல் என்ற வேறுசில பெயர்களும் உண்டு.

விளம்பரம்

News18

கோழி கறியை பாக்கு போன்ற சிறு சிறு துண்டுகளாக வெட்டி விறகு அடுப்பில் மண் சட்டி வைத்து அது சூடானதும் எண்ணெயை ஊற்ற வேண்டும்,காய்ந்த மிளகாயை விதைகளை நீக்கி சுத்தம் செய்து அதை எண்ணெயில் போட்டு வதக்கிய பிறகு கோழி கறியை போட்டு பிரட்டி விட்டு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டால் எண்ணெயும் தண்ணியும் பிரிந்து நன்றாக கொதித்து வற வறன்னு வறுத்தால் சுருக்குன்னு காரசாரமான கறி வறுவல் தயார்….
அப்படியே அள்ளிப்போட்டு சுட சுட சாப்பிட்டால் சளி எல்லாம் கரைந்து காணமல் போய்விடும். ஆக மொத்தத்தில் நாளே பொருள் வைத்து நச்சுனு ஒரு கறி வறுவல்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com